/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுார் டவுன் பஞ்.,ல் நாளை கடையடைப்பு
/
தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுார் டவுன் பஞ்.,ல் நாளை கடையடைப்பு
தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுார் டவுன் பஞ்.,ல் நாளை கடையடைப்பு
தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுார் டவுன் பஞ்.,ல் நாளை கடையடைப்பு
ADDED : நவ 28, 2024 06:46 AM
ப.வேலுார்: -ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், 2025 - 26ம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமை
கட்டணம், தொழில்-வரி, சொத்துவரி உயர்வை கண்டித்து, ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பில்,
நாளை, 29ல் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் கூறியதாவது: அனைத்து வகை
வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டுமென மத்திய அரசு
அறிவித்துள்ளது. இதனால், சிறு, குறு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் பொருளாதார ரீதியாக
பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சேவை வரியை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும்,
ப.வேலுார் டவுன் பஞ்., நிர்-வாகம் சார்பில், 2025-26ம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமை கட்டணம்,
தொழில் வரி, சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நாளை ஒருநாள் கடைய-டைப்பு
போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், ப.வேலுார் நகர அனைத்து சிறு வணிகர்கள் சங்கம், ப.வேலுார் நகர
சிமென்ட் இரும்பு மரம் எலக்ட்ரிகல் சங்கம், ப.வேலுார் நகர ஓட்டல்கள் பேக்கரி வியாபாரிகள் சங்கம், ப.வேலுார்
நகர தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், ப.வேலுார் நகர பாத்திரக்கடை வியா-பாரிகள் சங்கம், மருந்து
வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு சிமென்ட் ஆர்ட்டிகல்ஸ் மற்றும் பைப் உற்பத்தியாளர்கள் சங்கம், பரமத்தி
வேலுார் தாலுகா நுகர்வோர் வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும்
கலந்துகொள்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.