/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீவனத்துக்கு தட்டுப்பாடு; ஆடு விற்பனை அதிகரிப்பு
/
தீவனத்துக்கு தட்டுப்பாடு; ஆடு விற்பனை அதிகரிப்பு
ADDED : மார் 11, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, எருமப்பட்டி, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது, வெயில் தாக்கம் அதிகரிப்பால், தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, விவசாயிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 20 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.