/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு; இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் சீர்வரிசை

ADDED : பிப் 10, 2025 07:22 AM
நாமக்கல்: நாமக்கல்லில், இன்று நடக்கும் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக, இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் சீர்வரிசை கொண்டுவந்து, ஹிந்துக்களிடம் வழங்கி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர். அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
நாமக்கல் - சேலம் சாலை, என்.ஜி.ஓ., காலனியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சித்தி விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், தீர்க்க சுமங்கலி மாரியம்மன், மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர், துர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்டவை கொண்ட திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தமிழ்வேத முறைப்படி குடமுழுக்கு விழா இன்று காலை, 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான மூன்றாம் கால யாக பூஜை, நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது.
இதில், அப்பகுதி இஸ்லாமிய மக்கள், அங்குள்ள சுன்னத் வல்ஜமாத் பள்ளி வாசலில் இருந்தும், கிறிஸ்தவ மக்கள், அங்குள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் இருந்தும் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு, கோவில் விழாக்குழுவினர் பரிவட்டம் கட்டியும், பூ, பழம் வழங்கியும் கவுரவித்தனர்.