/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழையால் பட்டுக்கூடு ஏலம் ரத்து
/
தொடர் மழையால் பட்டுக்கூடு ஏலம் ரத்து
ADDED : டிச 01, 2024 01:32 AM
தொடர் மழையால்
பட்டுக்கூடு ஏலம் ரத்து
ராசிபுரம், டிச. 1--
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வந்ததால், பட்டுக்கூடு விற்பனைக்கு வரவில்லை. இதனால், நேற்று நடக்க இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், வேளாண் பணிகள், கட்டுமான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. ராசிபுரம் நகரத்தில் பகல் நேரத்திலேயே மக்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. மாலை, 5:00 மணியில் இருந்தே குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.

