/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்
/
திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா போட்டிகள்
ADDED : டிச 20, 2024 01:29 AM
நாமக்கல், டிச. 20-
திருவள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளுவரின், 133 அடி உயர திருவுருவச் சிலை கடந்த, 2000ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு, 25 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை வெள்ளி விழாவாக கொண்டாட நவம்பர், 12-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் வரும் டிச., 23-ம் தேதி முதல் டிச., 31-ம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி நடத்தப்படவுள்ளது. திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000, மூன்றாம் பரிசாக, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.