தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பத்திரப்பதிவு நடைமுறையை எளிதாக்கி லஞ்சத்தை ஒழிக்கணும்: ஆவண எழுத்தர்கள்

பத்திரப்பதிவு நடைமுறையை எளிதாக்கி லஞ்சத்தை ஒழிக்கணும்: ஆவண எழுத்தர்கள்

பத்திரப்பதிவு நடைமுறையை எளிதாக்கி லஞ்சத்தை ஒழிக்கணும்: ஆவண எழுத்தர்கள்


ADDED : ஜூன் 06, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்க தலை வர் ரவிச்சந்திரன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்க துடிக் கும் புதிய அரசுக்கு, எங்களின் நன்றி. இந்த முயற்சிக்கு தோள் கொடுக்க, தமிழகத்தில் உள்ள ஆவண எழுத்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். பொதுமக்களிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள நியாயமான கட்டணத்தை தவிர, எந்தவிதமான லஞ்சமும் பெறாமல், ஆவண எழுத்து பணியை மிக சிறப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் செய்ய நாங்கள் உறுதியேற்கிறோம். லஞ்சமில்லாமல் நேர்வழியில் பணியாற்ற நாங்கள் தயார்.

நாங்கள் நேர்மையாக செயல்பட விரும்பினாலும், கள நிலவரம் எங்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. சில சார்பதிவாளர் அலுவலகங்களில், அதிகாரிகளுக்கு சேர வேண்டிய சட்டவிரோத மாமூல் தராவிட்டால், முறையாக எழுதப்பட்ட பத்திரங்களில் கூட வேண்டுமென்றே ஏதாவது ஒரு குறைபாட்டை கண்டுபிடித்து, பத்திரப்பதிவை இழுத்தடிக்கின்றனர். இதனால், நிலம் வாங்கும், விற்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அரசு அதிகாரிகள், தங்களின் சுயலாபத்திற்காக வேண்டுமென்றே பத்திரங்களை முடக்குவதை தடுக்க, அரசு ஒரு தெளிவான வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும்.

இந்த நெறிமுறையை அரசு வகுத்து கொடுத்தால், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், லஞ்சத்திற்கு துணை போகாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில், பணி செய்ய காத்திருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us