/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொத்துக்காக அண்ணன் மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற தங்கையால் பரபரப்பு
/
சொத்துக்காக அண்ணன் மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற தங்கையால் பரபரப்பு
சொத்துக்காக அண்ணன் மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற தங்கையால் பரபரப்பு
சொத்துக்காக அண்ணன் மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற தங்கையால் பரபரப்பு
ADDED : ஆக 23, 2025 01:45 AM
நாமக்கல், மோகனுார் அடுத்த ஒருவந்துாரை சேர்ந்தவர் கன்னியம்மாள், 40. இவர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு திடீரென தன்னிடம் இருந்து மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, மீட்டனர்.
தொடர்ந்து, அவர் கலெக் டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் மேற்கண்ட முகவரியில், 17 ஆண்டாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
என் கணவர் விவசாயி. எனக்கு ஒரு மகள் உள்ளார். என்னுடன் பிறந்தவர்களும், நானும் சேர்ந்து, தற்போது நான் வசித்து வரும் வீட்டை, அண்ணன் மாரிமுத்து பெயருக்கு எழுதி வைத்தோம். நான் திருமணமாகி வாடகை வீட்டில் வசித்து வந்தேன். என் அண்ணன் மாரிமுத்து, கிடாரத்தில் வீடு கட்டி குடிபோனதால், பழைய வீட்டை வைத்து கொள்ள சொல்லி பணம் கேட்டார்.நானும் பணம் கொடுத்துவிட்டு, அவரிடம் எதுவும் எழுதி வாங்கவில்லை. தற்போது வரை அந்த வீட்டிற்கு வரி கட்டி பராமரித்து வருகிறேன். மின் இணைப்பு மாரிமுத்து பெயரிலேயே உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்திற்கு, பட்டா இல்லாததால் அதை வாங்க முயற்சித்து வருகிறேன்.
தற்போது பட்டா வருவதை அறிந்த என் அண்ணன் மாரிமுத்து, 'என் வீட்டை எனக்கே கொடுத்துவிடு' என மிரட்டுகிறார். கடந்த, 19 மாலை, 4:00 மணிக்கு, அரிவாளுடன் வந்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தார். அதை தடுத்த என்னை வெட்ட வந்தார். எனக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், என் அண்ணன் மாரிமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.