/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உள்ளிருப்பு, தற்செயல் விடுப்பு, 48 மணி நேர 'ஸ்டிரைக்' நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு செயற்குழு தீர்மானம்

ADDED : நவ 25, 2024 03:14 AM
நாமக்கல்: 'கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளிருப்பு, தற்செயல் விடுப்பு, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் என, மூன்று கட்ட போரட்டம் நடத்த', மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்-றப்பட்டது.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாகு-பேரன், பொருளாளர் ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.கூட்டத்தில், பணிச்சுமையால் பாதிக்கப்படும் கள பணியாளர்-களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடு-களை வரையறுக்க வேண்டும். கூடுதல் இயக்குனருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும், இயக்குனருக்கு மாற்றுவதை நிறுத்தி, பழைய நடைமுறை தொடர வேண்டும். சிறப்பு திட்-டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு கால நிர்ணயம் வழங்-காமல், ஊழியர்கள் மீது பெரும் பனிச் சுமையை சுமத்துவ-தாலும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும். வரும் டிச., 9ல், தாலுகா அலுவலகங்களில் உள்ளிருப்பு இயக்-கமும், டிச., 19ல், ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு, 2025 ஜன., 22 முதல், 23 வரை, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் செந்-தில்குமார், பொருளாளர் இளங்கோவன், மாநில, மாவட்ட நிர்வா-கிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.