/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
ADDED : ஆக 07, 2024 07:29 AM
நாமக்கல்: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், நாமக்கல்லில் நேற்று துவங்கியது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகாமில், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல் என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.சமூக பணியாளர் மணிகண்டன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கற்பகம், சவுடேஸ்வரி, குழந்தைகள் ஆலோசகர் நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயிற்சியின்போது, 'குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாம், இன்றும், நாளையும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.