/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்ட அளவிலான விளையாட்டு போட்டி எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் சாதனை
/
வட்ட அளவிலான விளையாட்டு போட்டி எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் சாதனை
வட்ட அளவிலான விளையாட்டு போட்டி எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் சாதனை
வட்ட அளவிலான விளையாட்டு போட்டி எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 08, 2025 01:23 AM
திருச்செங்கோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக ப.வேலூர் வட்ட அளவில் நடந்த, கூடைபந்து, கைப்பந்து, கபாடி, கையுந்து, கோகோ , சிலம்பம், சதுரங்கம் ஆகிய போட்டிகளில் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்களுக்கான கூடைபந்தாட்ட போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் முதலிடமும், மாணவியர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். கையுந்து போட்டியில், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனர். கைப்பந்து போட்டியில், 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். மாணவியருக்கான கைப்பந்து போட்டியில், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். கோகோ விளையாட்டு போட்டியில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். சதுரங்க போட்டியில், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவன் சித்தேஷ், முதலிடமும், மாணவன் தவ்பிக், இரண்டாம் இடமும் பெற்றனர்.
கபடி போட்டியில், 19 வயது உட்பட்ட மாணவியருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் மாணவன் சர்வேஷ் முதலிடம் பெற்றுள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம்,இயக்குனர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.