/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இண்டஸ்ட்ரியல் பிரிவில் கணக்கெடுக்க சிறு விசைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு
/
இண்டஸ்ட்ரியல் பிரிவில் கணக்கெடுக்க சிறு விசைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு
இண்டஸ்ட்ரியல் பிரிவில் கணக்கெடுக்க சிறு விசைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு
இண்டஸ்ட்ரியல் பிரிவில் கணக்கெடுக்க சிறு விசைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு
ADDED : டிச 20, 2024 01:30 AM
திருச்செங்கோடு, டிச. 20-
இண்டஸ்ட்ரியல் பிரிவில், பட்டறைகளை அளவெடுக்க திருச்செங்கோடு சிறு விசைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறு விசைத்தறி தொழிலில், குடிசை தொழிலாக இயங்கி வரும் தறி பட்டறைகளுக்கு இண்டஸ்ட்ரியல் என கணக்கிட்டு, வரி விதிக்க பட்டறைகளை அளவெடுக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று பட்டறைக்கு அளவெடுக்க வந்த ஊழியர்களுக்கு, தறித்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்களை சிறை பிடித்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் முருகானந்தம், சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் புஷ்பா, சிங்காரவேலு ஆகியோர் கூறியதாவது:
வீடுகளிலேயே ஒரு பகுதியில் தறிகள் அமைத்து, பிழைத்து வரும் ஏழை நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதியான சூரியம்பாளையம், சட்டையம் புதுார், ராஜாகவுண்டம்பாளையம் பகுதிகளில் இண்டஸ்ட்ரியல் என கணக்கெடுக்க நகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். ஏற்கனவே வரியை உயர்த்துவதை நிறுத்த வேண்டுமென அமைச்சர்களிடம் மனு கொடுத்திருக்கிறோம். அவர்களும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
எனவே தற்போது அளக்க வேண்டாம் என்றுகூறி திருப்பி அனுப்பியுள்ளோம், ஏற்கனவே விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் இண்டஸ்ட்ரியல் என கணக்கிட்டு வரி விதித்தால், 300 ரூபாய் உள்ள வீட்டு வரி, 3,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தறிகளை இன்று, 20ம் தேதி ஒருநாள் நிறுத்த உள்ளோம். தறித்தொழிலாளர்கள் வரி விதிப்பை கண்டித்து, ஊர்வலமாக வந்து நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.