/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024
/
எக்ஸல் பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024
எக்ஸல் பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024
எக்ஸல் பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024
ADDED : டிச 13, 2024 08:52 AM
குமாரபாளையம்: மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2024 நாடு முழு-வதும், 51 நோடல் மையங்களில் ஒரே நேரத்தில் கடந்த, 11ம் தேதி தொடங்கியது. வரும், 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, குமாரபாளையம் எக்ஸல் பொறி-யியல் கல்லுாரி தன்னாட்சியில், மென்பொருள் பதிப்பு பிரிவில் தொடங்கிய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2024ல், 21 அணிகளை சேர்ந்த, 126 மாணவ,- மாணவியர் கலந்து கொண்டனர். கல்-லுாரி அரங்கில் நடந்த தொடக்க விழாவில், மத்-திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்த காணொலி காட்சி இடம் பெற்றது.
ஹேக்கத்தான் போட்டியில், மருத்துவம்,- நிதி சேவை,- பொழுதுபோக்கு மற்றும் சில்லறை வணிகம், டிஜிட்டல் தகவல், புதிய- புதுப்பிக்கத்தக்க நீடித்த நிலையான வளங்களுக்கு புதிய முயற்சிகளை கண்டறிதல், பயணங்கள், சுற்றுலா தொழிலுக்கு தேவையான தீர்வு மற்றும் புதிய ஆலோச-னைகள் ஆகிய நான்கு வகையான சிக்கல்க-ளுக்கு தீர்வு காணும் பணியில் மாணவர்கள் ஈடு-பட்டுள்ளனர்.
டெலோய்ட் மனிதவள வல்லுனர் ராமச்சந்திரன், எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளி தலைவர் மற்றும் தொழில் முனைவோர் முனைவர் பிரபு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் துணை இயக்குனர் முனைவர்.ஸ்ரீசாயில் சுரேஷ் காம்ப்ளே உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் நடேசன், துணைத் தலைவர் மருத்துவர் மதன்கார்த்திக், எக்ஸல் தொழில்-நுட்ப வளாக செயல் இயக்குனர் மற்றும் முதல்வர் முனைவர் பொம்மண்ணராஜா, துறை தலை-வர்கள், ஹேக்கத்தான் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழக துணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீசாயில் சுரேஷ் காம்ப்ளே கூறுகையில்,''இந்தியா முழுவதும், 51 மையங்-களில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடைபெ-றுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கான சிந்த-னைகளை மேம்படுத்தி பிரச்னைகளுக்கான தீர்-வுகளை, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் காண முடிகிறது,'' என்றார்.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, தலா ஒரு லட்சம் வீதம் அகில இந்-திய தொழில் நுட்ப கல்வி கழகம் பரிசுத்தொகை வழங்குகிறது. நாடு முழுவதும், 51 மையங்களில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2024-ல், 2,247 பதிவுகள் பெறப்பட்டுள்ளன. 1,300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்கின்றனர்.

