/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு
/
டூவீலரில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு
ADDED : நவ 16, 2025 02:28 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 57; விவசாயி. இவர், தன் டூவீலரில் ராசிபுரம் பூக்கடைக்கு, நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அப்போது டூவீலரின் முன்பக்கத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் வந்ததால், கடைவீ-தியில் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு சத்தம் வந்த இடத்தில் பார்த்துள்ளார்.
அப்போது, வண்டியின் முன் பக்கத்தில், பெட்ரோல் டேங்க் பகுதியில், 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள் அவர் வண்டியை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்த பொது-மக்கள் உதவியுடன், அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விடுவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

