/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு கல்லுாரியில் மஞ்சப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, கல்-லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார்.
குமாரபாளையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் குணசே-கரன், நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றி, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்-கினார். நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, வணிக-வியல் துறைத்தலைவர் ரகுபதி, தமிழ்த்துறை தலைவர் ஞான-தீபன், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.