/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோடு மின்வாரியம் சார்பில் சோலார் பேனல் கண்காட்சி
/
தி.கோடு மின்வாரியம் சார்பில் சோலார் பேனல் கண்காட்சி
தி.கோடு மின்வாரியம் சார்பில் சோலார் பேனல் கண்காட்சி
தி.கோடு மின்வாரியம் சார்பில் சோலார் பேனல் கண்காட்சி
ADDED : அக் 30, 2025 01:55 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, நாமக்கல் மின் பகிர்மான வட்டம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், பிரதமரின் சூரிய வீட்டு மின் திட்டத்தில் சோலார் பேனல் விற்பனையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் இணைந்து, சோலார் கண்காட்சி நடத்தின. திருச்செங்கோடு கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
நாமக்கல் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சபாநாயகர் கூறுகையில், ''தமிழகத்தில் ஒரு கோடி பேனல்கள் அமைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 8 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
அதில், 6 லட்சம் மின் இணைப்புகள் வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன. இந்த கண்காட்சி மூலம், சோலார் பேனல்கள் அமைப்பதால் மின் கட்டணம், நான்கில் ஒரு பங்காக குறையும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,'' என்றார்.

