/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜூன் 01, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று வைகாசி மாத சனிக்கிழமையையொட்டி, பெரியமலை அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.