/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
/
முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : நவ 11, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் பிரசித்தி பெற்ற ஐந்து முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஐப்பசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையெட்டி, மூலவர் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் நடந்தது.
இதில், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், நேர்த்திக்கடனாக ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். பின் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு விருந்தளித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.