/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
22, 23 தேதிகளில் வாக்காளர் பட்டியல் நாமக்கல்லில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
/
22, 23 தேதிகளில் வாக்காளர் பட்டியல் நாமக்கல்லில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
22, 23 தேதிகளில் வாக்காளர் பட்டியல் நாமக்கல்லில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
22, 23 தேதிகளில் வாக்காளர் பட்டியல் நாமக்கல்லில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
ADDED : நவ 21, 2025 01:55 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நாளை துவங்கி, இரண்டு நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை, வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறுவதற்கு, மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நவ., 22, 23ம் தேதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிரமமின்றி படிவங்களை பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்க வசதியாக, தன்னார்வலர்களும் பணித்தள பொறுப்பாளர்களும் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாக்காளர்கள் தங்கள் பெயர், 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய, அனைத்து உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
. எனவே அனைத்து வாக்காளர்களும், தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைத்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.முன்னதாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

