/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
24ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்: கலெக்டர்
/
24ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்: கலெக்டர்
ADDED : ஜூன் 16, 2025 07:30 AM
நாமக்கல்: 'திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், வரும், 24ல் நாமக்கல்லில் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு, ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில், 'திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்', வரும், 24 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள, மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை இல்லாதவர்களுக்கு, இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில், இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமிற்கு வருகை தரும் திருநங்கைகள் அனைவரும், தங்களின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வீட்டு வரி ரசீது, பேங்க் பாஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.