/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பராமரிப்பு மையம்
/
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பராமரிப்பு மையம்
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பராமரிப்பு மையம்
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பராமரிப்பு மையம்
ADDED : நவ 29, 2025 01:39 AM
நாமக்கல், நாமக்கல்லில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், டைப்-1 சர்க்கரை நோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
இந்தியாவில், 9 லட்சம் சிறுவர், சிறுமியர், 'டைப்--1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும், 4 முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவும், விரல் மூலம் ரத்த குளுக்கோஸ் பரிசோதனை செய்யவும், வாழ்க்கை முழுவதும் அவசியமாகிறது. இச்சிறுவர்கள் பெரும்பாலும், 20 வயதை கடந்து வாழ முடியாமல் சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, திடீர் கோமா போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேசிய சுகாதார ஊக்கத்திட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் கோவை இதயங்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, கடந்த, 2 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 85 சிறார்களுக்கு உலக தரத்தில் உள்ள சிறந்த இன்சுலின்களை முன் நிரப்பப்பட்ட கார்ட்ரிட்ஜ் வடிவில், வலியில்லா 4 மி.மீ., ஊசிகள், குளுகோ மீட்டர், ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம், 100 குளுக்கோஸ் ஸ்ட்ரிப்கள், இன்சுலின் பம்ப் மற்றும் 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி சேவை ஆகியவற்றை வழங்கி வருகின்றன.
இந்த சிகிச்சை, மேற்கத்திய நாடுகளின் தரத்துக்கு இணையாக வழங்கப்படுகிறது. இதன் விளைவாக அவசர மருத்துவ சேர்க்கைகள், சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, மரணம் போன்றவை பெருமளவில் குறைந்துள்ளன.
ஒவ்வொரு குழந்தைக்கும், மாதம் சிகிச்சைக்கான சராசரி செலவு, 5,000 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை உள்ளது. இதனால், டைப்--1 சர்க்கரை நோய்க்கான சிறப்பு பராமரிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், 'டைப்-1' சர்க்கரை நோயால் ஏற்படும் அனைத்து உடல்நல கோளாறுகளுக்கும் தேவையான அனத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. இந்த மையம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. டைப்--1 நீரிழிவு நோயுள்ள எந்த ஏழை குழந்தையும் சிகிச்சை இல்லாமல் தவிக்க கூடாது, ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான, சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ கண்காணிப்பாளர் குணசேகரன், குழந்தைகள் நல மருத்துவ துறை தலைவர் சுரேஷ்கண்ணன், இணை பேராசிரியர் வசுமதி, இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் ஸ்வாமிநாதன், ஏக்சன் அக்ரிசயன்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன், சித்ரா
உள்பட பலர் பங்கேற்றனர்.

