/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக்குழு
/
உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக்குழு
ADDED : ஜன 13, 2025 02:52 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில் உரம் இருப்பு, தேவை குறித்து கண்காணிக்க வேளாண் உதவி இயக்குனர் தலைமையில், குழு அமைக்கப்பட்-டுள்ளது' என, வேளாண் இணை இயக்கனர் கலைச்செல்வி தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது, பயிர் சாகு-படிக்கு தேவையான ரசாயன உரங்கள் தனியார், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்-பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. உர இருப்பில் யூரியா, 2,521 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 802 மெட்ரிக் டன், பொட்டாஷ், 1,365 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம், 2,582 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உரம், 474 மெட்ரிக் டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு, முறையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் பயிர்கள் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர்க-ளுக்கு தேவையான உரங்கள் சரிவர விவசாயி களுக்கு வினி-யோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், வேளாண் உதவி இயக்குனர் வேலு, -9842543215, வேளாண் அலுவலர் (பொ) கலைச்செல்வன், -8610071491 ஆகியோர் உள்-ளனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள தனியார், தொடக்க வேளாண் கூட்-டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை, இணை பொருட்கள் வாங்க கட்டா-யப்படுத்த கூடாது.
விதிகளை மீறி விற்பனை செய்வது உரக் கட்டுப்பாட்டு ஆணை-யை மீறும் செயலாக கருதப்படும். உர விற்பனை நிலையங்களில் விதி மீறல் ஊர்ஜிதமானால், உர உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரம் தொடர்பான புகார்களுக்கு, -9363440360 என்ற, 'வாட்ஸாப்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.