/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அரசு அலுவலர் உயிர், உடமை பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை'
/
'அரசு அலுவலர் உயிர், உடமை பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை'
'அரசு அலுவலர் உயிர், உடமை பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை'
'அரசு அலுவலர் உயிர், உடமை பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை'
ADDED : ஆக 24, 2025 12:47 AM
நாமக்கல், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், மாவட்ட மையம் சார்பில், மாவட்ட கோரிக்கை மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க
நிர்வாகிகள் ஆனந்தன், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டமைப்பு நிர்வாகி கள் பாலசுப்ரமணியன், செந்தில்குமார், செங்க மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், தமிழ்செல்வன், சரவணன் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.
மாநாட்டில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நில அளவைத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனைகள் வழங்கவும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலி பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.