/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஐப்பசி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
/
ஐப்பசி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ஐப்பசி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ஐப்பசி பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED : நவ 14, 2024 07:16 AM
ப.வேலுார்: ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில் உள்ள, 400 ஆண்டு பழ-மையான ஏகாம்பரேஸ்வரருக்கு, பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது.
இதேபோல், ப.வேலுாரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பாண்டமங்கலம் புதியகாசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், பில்லுார் விரட்டீஸ்வரர்
கோவில், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.சேந்தமங்கலம்...சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஐப்பசி வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று இக்கோ-விலில் உள்ள நந்தி, சிவபெருமானுக்கு, பால், தயிர், இளநீர் உள்-ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவபெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்-பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

