/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில்சஷ்டி சிறப்பு பூஜை
/
முருகன் கோவில்களில்சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : மே 04, 2025 01:11 AM
ப.வேலுார்:-சஷ்டியையொட்டி, ப.வேலுார், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.