/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 ஒன்றியங்களில் சிறப்பு மண் பரிசோதனை முகாம்
/
3 ஒன்றியங்களில் சிறப்பு மண் பரிசோதனை முகாம்
ADDED : டிச 07, 2024 06:58 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடக்க உள்ளதால் பயன்படுத்திக்கொள்ளுமாறு, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் துறையின் கீழ், திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நட-மாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம்
கிராமங்க-ளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண் வள
அட்டை அன்-றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டிச., மாதத்திற்கு கீழ்காணும் விபரப்படி நடமாடும் மண் பரிசோ-தனை நிலையம் மூலம் சிறப்பு மண்பரிசோதனை முகாம்
நடை-பெற உள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்-களின் மண், நீர் மாதிரிகளை ஆய்வு செய்து
பயனடையலாம். டிச., 11ல் சேந்தமங்கலம் ஒன்றியம், அக்கரைப்பட்டி, 18ல் எலச்சி-பாளையம் ஒன்றியம் இளநகர், 26ல்,
மல்லசமுத்திரம் ஒன்றியம் கீழ்முகம் ஆகிய இடங்களில், காலை, 9:00 மணிக்கு முகாம் தொடங்குகிறது.விவசாயிகள் மண்மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாக நாமக்கல், வசந்தபுரம் மண் பரிசோதனை மற்றும்
நடமாடும் திருச்செங்கோடு, நாராயணம்பாளையத்தில் உள்ள மண் பரிசோ-தனை நிலையங்களில் வழங்கியும்
பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.