/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
ADDED : டிச 04, 2025 06:01 AM

மல்லசமுத்திரம்: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று, கார்த்திகை நட்சத்திரம், தீபத்திருநாளை முன்னிட்டு, மூலவர் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் வளாகத்தில், பலவகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் உட்பிறகாரத்தில் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர். இரவு, 7:00 மணிக்கு, கோவில் வெளிப்புறத்தில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.