/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 06, 2025 01:29 AM
நாமக்கல் :ஆண்டுதோறும் செப்., 5ல் முதுகு தண்டுவட பாதிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று, தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில், நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பரமத்தி சாலை, எம்.ஜி.ஆர்., சிலை அருகே இருந்து மூன்று சக்கர வாகனங்கள் மூலம் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு, மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். பரமத்தி சாலை, கோட்டை சாலை, காந்தி சிலை வழியாக பூங்காச்சாலை வந்து கமலாலய குளம் அருகே பேரணி நிறைவடைந்தது.
அதில், டூவீலர் ஓட்டிகள் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். அதிவேகம் ஆபத்தானது. வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பேசக்கூடாது. ஒரு நொடி விபத்து, வாழ்நாள் பாதிப்பு என, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.