/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
/
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
ADDED : செப் 14, 2025 04:46 AM
நாமக்கல்:நாமக்கல், பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. பாவை கல்வி நிறுவனங்களின் நிறு-வனரும், தலைவருமான ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார்.
நாமக்கல் எஸ்.பி., விமலா, பள்ளி கொடியை ஏற்றி வைத்து பேசு-கையில், ''பாவை வித்யாஷ்ரம் பள்ளி, கல்விக்கு நிகராக விளை-யாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது பாராட்டத்தக்-கது.குழந்தைகளிடம் டிஜிட்டல் சாதனங்களை கொடுக்காமல், அவர்-களை நன்கு விளையாட அனுமதிக்க வேண்டும்,'' என்றார். அவ-ருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்-களின் கலை நிகழ்ச்சி, கராத்தே, சிலம்பம், மாஸ் டிரில் போன்ற-வற்றை செய்தனர். பின், ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்-பட்டது. முன்னதாக, பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளின் இயக்-குனர் சதிஷ் வாழ்த்தி பேசினார்.
பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், துணை தலைவர் மணிசேகரன், பொருளாளர் ராமகிருஷ்ணன், இணை செயளாளர் பழனிவேல், இயக்குனர் ராமசாமி, முதல்வர் ரோஹித், தலைமையாசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.