/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,239 மனுக்கள் வழங்கல்
/
உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,239 மனுக்கள் வழங்கல்
ADDED : செப் 27, 2025 01:44 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 13 அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மொத்தம், 1,239 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 339 பெண்கள் மனு அளித்தனர். முகாமில், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி, தாசில்தார் வெங்கடேஸ்வரன், டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபாலன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், செயல் அலுவலர் வனிதா, துணைத்தலைவர் ரகுராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* வெண்ணந்துார் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி பஞ்.,ல் நடந்த முகாமிற்கு, பி.டி.ஓ.,க்கள் வனிதா, கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். 46 சேவைகள் மற்றும் 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.