/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு
ADDED : ஆக 21, 2025 02:24 AM
ராசிபுரம், ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட பட்டணம் டவுன் பஞ்.,ல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று முன்தினம் நடந்தது. முகாமில், பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், பிரிவு மாற்றம், ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட இ-சேவைகள், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தனர்.
350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக பதிவு செய்தனர். இதில், உடனடியாக தீர்க்கப்படக்கூடிய மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு என, 100க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. பட்டணம் டவுன் பஞ்., இ.ஓ., ஜானகிராமன், தலைவர் போதையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.