/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக., 3ல் மாநில அளவில் 'செஸ்' போட்டி
/
ஆக., 3ல் மாநில அளவில் 'செஸ்' போட்டி
ADDED : ஜூலை 15, 2025 01:21 AM
நாமக்கல், 'நாமக்கல்லில், வரும் ஆக., 3ல், மாநில அளவிலான செஸ் போட்டி நடக்கிறது' என, செஸ் அசோசியேசன் செயலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான, 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான செஸ் விளையாட்டு போட்டி, வரும் ஆக., 3ல், நாமக்கல் செல்வம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இப்போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பற்கேற்க முடியும். போட்டிக்கு, முதன்மை நடுவராக பவானியை சேர்ந்த தேசிய நடுவர் ராமசாமி பணியாற்றுவார்.
போட்டிகள் ஒரே பிரிவின் கீழ் நடத்தப்பட்டு, சிறுவர், -சிறுமியருக்கு என, தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். சிறுவர் பிரிவில், முதல் பரிசாக சைக்கிள், 2ம் பரிசாக டி.ஜி.டி., 2010 செஸ் கடிகாரம், 3ல் இருந்து, -15 வரை கோப்பைகள் என மொத்தம், 15 பரிசுகள் வழங்கப்படும்.
அதேபோல், சிறுமியர் பிரிவில், முதல் பரிசாக, டி.ஜி.டி., 2500 செஸ் கடிகாரம், 2ல் இருந்து, -10 வரை கோப்பைகள் என மொத்தம், 10 பரிசுகளும், பங்குபெறும் அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். முதலில் பதிவு செய்யும், 100 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். விருப்பம் உள்ளவர்கள், ஆக., 1க்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.