/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
/
அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
ADDED : மே 18, 2025 05:23 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யில், அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. பேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள், அ.தி.மு.க., ஆட்-சியில் கொண்டுவரப்பட்ட பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் மக்களிடம் வழங்கினர். மேலும், தி.மு.க., ஆட்சியின் அவலங்களையும் துண்டு பிரசுரங்க-ளாக பொதுமக்கள் இடையே வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, புதுப்பட்டி ரோடு ஆகிய இடங்களுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் வழங்கினர். அதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்., மன்றம் சுரேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன், பேரூர் செயலாளர் மணிக்கண்ணன், தகவல் தொடர்பு பிரிவு அமைப்பாளர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.