/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி பவள விழாவில் மாணவிக்கு கவுரவம்
/
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி பவள விழாவில் மாணவிக்கு கவுரவம்
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி பவள விழாவில் மாணவிக்கு கவுரவம்
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி பவள விழாவில் மாணவிக்கு கவுரவம்
ADDED : ஜூலை 24, 2025 01:38 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி, 1951ல் தொடங்கப்பட்டது. தற்போது, 75 ஆண்டு முடிவடைந்த நிலையில், பவள விழா கொண்டாட பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். விழா நாளை காலை, 9:00 மணிக்கு தொடங்குகிறது. சி.இ.ஓ., மகேஸ்வரி வரவேற்கிறார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். திருவள்ளுவர் சிலையை, 9ம் வகுப்பு மாணவி தியாகச்சுடர் திறந்து வைக்கிறார். விழாவில், ஓய்வு பெற்ற இப்பள்ளியின் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள், பள்ளியில் படித்து பெரிய பதவிகளில் வகித்த, வகிக்கின்ற முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
ஜேபி உடையார் குரூப்
கம்பெனியின் சேர்மன் ஜெயசீலன் தலைமை வகிக்கிறார். மாலை, மாணவர்களை ஊக்குவிக்க, பர்வீன் சுல்தானாவின் சொற்பொழிவு நடக்கிறது. விழா குறித்து, ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவருமான மணி கூறியதாவது:
பவள விழா காணும் இப்பள்ளியில் இருந்து, ஏழு மாணவர்கள், எம்.பி., -எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். பணியாற்றி வருகின்றனர். அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இப்பள்ளியின், 9ம் வகுப்பு மாணவி தியாகச்சுடர், 1330 திருக்குறளையும் ஒப்புவித்ததால், 'குறளரசி' என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவரை கவுரவிக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மாணவி திறந்து வைக்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.