/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
/
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 24, 2025 01:38 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா, மாணவ தலைமை பதவியேற்பு விழா, திருச்செங்கோடு குறு வட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டி துவக்க விழா என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சேலம் கோட்டம், இந்திய வனச்சரக காப்பாளர் கலாநிதி, முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவ தலைவர், துணைத்தலைவர் மற்றும் குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''மாணவர்கள் இளம் வயதிலேயே தனக்கான உரிய இலக்கை தேர்ந்தெடுத்து, அதன் வழியே பயணித்து, இலக்கை எட்டவேண்டும்,'' என்றார். அதன்பின், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு
நாடகங்கள் நடந்தன.
மேலும், குழு விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிறுவன தலைவர் ராஜா, தாளாளர் ராஜன், பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, பொருளாளர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.