sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

/

ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


ADDED : பிப் 03, 2025 07:52 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், பொட்டிரெட்டிப்பட்டியில் அமைந்-துள்ள ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில், இரண்டாவது குழுவின், முதலாண்டு மாணவ, மாணவியர், விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி அறக்கட்டளை பெருந்த-லைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சுப்ரமணி வரவேற்றார். செய-லாளர் வேலுசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ப.வேலுார் சுகம் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சுகிதா பேசியதாவது:

இன்றைய நவீன காலத்தில், மொபைல் போனை பயனுள்ள செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான பாதையில் செல்லக்கூடாது. செவிலியர் பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் முழு அர்ப்ப-ணிப்புடனும், எந்தவித பாகுபாடும் காட்டாமல் தாங்கள் மேற்கொண்ட செவிலியர் பணியை சிறப்புடன் செய்ய வேண்டும். மேலும், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மருத்-துவ சேவையை போற்றும் வகையில், அவரின் தன்னலமற்ற சேவையை பின்பற்றி, அனை-வரும் சேவை புரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரி முதல்வர் நற்றமிழ், உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவியர் ஏற்றனர். ரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரம-ணியன், நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, பேராசி-ரியர் சரண்யா, விரிவுரையாளர்கள், பேராசி-ரியர்ள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us