தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சோளப்பயிரில் செயல் விளக்க திடல் அமைக்க மானியத்துடன் இடுபொருள்

சோளப்பயிரில் செயல் விளக்க திடல் அமைக்க மானியத்துடன் இடுபொருள்

சோளப்பயிரில் செயல் விளக்க திடல் அமைக்க மானியத்துடன் இடுபொருள்


ADDED : ஆக 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் போதியளவு தென்மேற்கு பருவமழை இல்லாததால், வறட்சி காணப்படுகிறது. இதனால், குறைவான பராமரிப்பு செலவு, குறைந்த நீர்த்தேவை, குறுகிய வயது மற்றும் அதிக லாபம் என்பதால், தற்போது சிறுதானியங்களில் முக்கியமான சோளம் பயிரிடுவதே சிறந்தது.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேர் பரப்பில் உயர் விளைச்சல் தரக்கூடிய சோளம் ரகங்களை பயிரிட்டு செயல் விளக்கத்திடல் அமைக்க, 7,500 ரூபாய்- மதிப்புள்ள இடுபொருட்கள் மற்றும் பின்னேற்பு மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்தொகுப்பில் உயர் விளைச்சல் ரக சோளம், 10 கிலோ, சிறுதானிய நுண்ணுாட்டம், 12.5 கிலோ, திரவ அசோஸ்பைரில்லம் மற்றும் திரவ பாஸ்போபாக்டீரியா முறையே, 500 மி.லி., அசாடிராக்டின் ஒரு லிட்டர், சூடோமோனாஸ், 2.5 கிலோ, இளஞ்சிவப்பு நிற மெத்தைலோபாக்டீரியா, 2.5 லி., ஆகியவை வழங்கப்படும். மேலும், சோளம் அறுவடை மானியமாக, 1,000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், சிறு, குறு மகளிர் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 'உழவன்' செயலியில் பதிவு செய்தும் அல்லது பகுதி உதவி வேளாண் அலுவலர்கள், மல்லசமுத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வையப்பமலை துணை வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us