/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானியத்தில் வீரிய விதை மக்காச்சோளம் வினியோகம்
/
மானியத்தில் வீரிய விதை மக்காச்சோளம் வினியோகம்
ADDED : ஆக 15, 2024 06:53 AM
எருமப்பட்டி: மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, மானிய விலையில் வீரிய விதை மக்காச்சோளம், இயற்கை உரம் வழங்கப்பட உள்ளது.வேளாண்மை துறை மூலம், மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதில், வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எருமப்பட்டி யூனியனில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிரிட தேவையான வீரிய மக்காச்சோள விதைகள், இயற்கை உரம், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. எனவே, மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் உள்ள விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு, வீரிய விதை, உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என, வேளாண்மை விரிவாக்க அலுவலர் தெரிவித்துள்ளார்.