/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொத்தனுாரில் டாஸ்மாக் கடைகளுக்கு திடீர் விடுமுறை
/
பொத்தனுாரில் டாஸ்மாக் கடைகளுக்கு திடீர் விடுமுறை
ADDED : மே 28, 2024 07:10 AM
ப.வேலுார் : ப.வேலுார் அருகே, பொத்தனுாரில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடத்து வருகிறது.
நேற்று மகா மாரியம்மன் தேரில் திருவீதி உலா நிகழ்ச்சியையொட்டி, பாதுகாப்பு கருதி முன்னெரிச்கை நடவடிக்கையாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதன்படி, ப.வேலுார் பைபாஸ் சாலையில் உள்ள, 3 டாஸ்மாக் கடைகள் மற்றும் பாண்டமங்கலம் அருகே உரம்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று காலை, பணிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் விடுமுறையால் திரும்பி சென்றனர். வழக்கம்போல் மதியம், 12:00 மணிக்கு கடை திறப்பார்கள் என காத்திருந்த, 'குடி'மகன்கள், டாஸ்மாக் விடுமுறை என அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.