நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனிப்பொழிவால் அவதி
ராசிபுரம், டிச. 8-
தமிழகத்தில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவு உள்ளது. ராசிபுரத்தை சுற்றி கிடமலை, போதமலை, பசிறுமலை, கொல்லிமலை, குருவாளா கரடு, மெட்டாலா கணவாய், அலவாய்மலை ஆகியவை உள்ளன. இதனால், மாவட்டத்தில் மற்ற இடங்களை விட ராசிபுரம் பகுதியில் குளிர் அதிகம் இருக்கும். நேற்று முன்தினம் இரவு முதல் குளிர் அதிகம் இருந்தது. சாலைகளில் பனிப்பொழிவு மேக மூட்டம்போல் இருந்தது. இதனால், முன்னால் வரும் வண்டிகள் சரியாக தெரியவில்லை. கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு வந்தன. முக்கியமாக ஆத்துார் பிரதான சாலை, மோகனுார் செல்லும் தொழிற்வடச்சாலை, கோனேரிப்பட்டி ஏரி ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது.