/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்
/
மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்
மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்
மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்
ADDED : டிச 23, 2024 09:14 AM
சேந்தமங்கலம்: மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை துவங்கியுள்ளதால் சேந்தமங்கலம் பகுதியில் கரும்புகளை வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
மோகனுாரில் பழமை வாய்ந்த, சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஆண்டு தோறும் சீசன் காலங்களில் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான கரும்பு அரவை கடந்த மாதம் துவங்கியது. இதையடுத்து, சர்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்டிருந்த கரும்புகளை வெட்டும் பணி, பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி விவசாயிகள், மோகனுாரில் உள்ள ஆலையில் கரும்புகளை அரவைக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது பதிவு செய்யப்பட்டிருந்த கரும்புகளை ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரும்புக்கு டன் ஒன்றுக்கு வெட்டு கூலியை சேர்த்து, 3,150 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ஆண்டு முழுவதும் வளர்த்து வெட்டும் கரும்புக்கு உரிய பராமரிப்பு செலவு கூட இல்லாத நிலை உள்ளது என, விவசாயிகள் கூறினர்.