/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜவகர் சிறுவர் மன்றத்தில் கோடைகால கலை பயிற்சி
/
ஜவகர் சிறுவர் மன்றத்தில் கோடைகால கலை பயிற்சி
ADDED : மே 03, 2025 01:21 AM
நாமக்கல்:ஜவகர் சிறுவர் மன்றம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நுண்கலை திறன் வெளிப்படும் விதமாக, ஆண்டுதோறும் மே, 1 முதல், 10 வரை, கோடை கால கலை பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. 25ம் ஆண்டாக, நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது.
இப்பயிற்சியில், பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், கைவினை, யோகா, சிலம்பம், கராத்தே போன்ற நுண்கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில்
சிறப்பாக செயல்படும் குழந்தைகளை தேர்வு செய்து, மாநில, தேசிய அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவர். 'நாமக்கல் மாநகராட்சி கோட்டை துவக்க பள்ளியில், காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில், பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்பி வைத்து பயன்பெறலாம்' என, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் தெரிவித்துள்ளார்.