ADDED : அக் 16, 2024 07:24 AM
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு, பருத்திப்பள்ளியை சேர்ந்த இளம்பெண், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, கடந்த, 10ல் உயிரிழந்தார். இதன் காரணமாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, நாமக்கல், திருச்செங்கோடு மருந்து ஆய்வாளர்கள், போலீசாருடன் இணைந்து, நேற்று வையப்பமலை, மல்லசமுத்திரம், நவணி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், இணையதளம் மூலமாக மாத்திரை வாங்கி அந்த இளம்பெண்ணிற்கு கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இணையதளம் மற்றும் மருந்து கடைகளில் வாங்கி கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பது தெரிய வந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு மருந்து உரிமம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கை விடுத்தனர்.