/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி யூனியனில் திட்ட பணிகள் ஆய்வு
/
எருமப்பட்டி யூனியனில் திட்ட பணிகள் ஆய்வு
ADDED : அக் 06, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் நடந்து வரும் திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
எருமப்பட்டி யூனியன் ரெட்டிபட்டி, கொடிக் கால்புதுார், சிவநாய்க்கன்பட்டி பஞ்.,களில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, திட்ட இயக்குனர் வடிவேல் பார்வையிட்டார். இதை தொடர்ந்து முத்துக்காப்பட்டி பஞ்,,ல் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, நமக்கு நாமே திட்டத்தில் கீழ் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பி.டி.ஓ., நடராஜன், சுகிதா, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.