/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர் சந்தையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு
/
உழவர் சந்தையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு
ADDED : மே 24, 2024 06:55 AM
நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில், மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நகராட்சி உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் மழைநீர் தேங்காதவாறு ஏற்பாடுகளை செய்தனர். மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை சீர் செய்யும் பணிகளை கலெக்டர் உமா நேற்று பார்வையிட்டு, பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என, நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், முல்லை நகரில் பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பூங்காவிற்கு தேவையான அளவு இட வசதி, வாகனங்கள் நிறுத்த, நடப்பதற்கு தேவையான அளவிற்கு இடம் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். வள்ளிபுரம் ஊராட்சி, தோக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி செல்வராஜீக்கு கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.