/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுக்கும் பணி
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
நாமக்கல் : புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு, நடப்பாண்டிற்கான கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம், 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாமக்கல் வட்டார வளமையம் சார்பில், நேற்று நகராட்சிக்கு உட்பட்ட செல்வகணபதி நகர், பெரியப்பட்டி பகுதி-களில் கணக்கெடுப்பு நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பா-ளர்கள் சிந்துஜா, செந்தில்குமரன், வட்டார வள மேற்பார்வை-யாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, ரவிக்குமார், பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசி-ரியை பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 15 வட்டாரங்களில் இதுவரை, 2,968 குடியிருப்புகளில், 13,981 கற்போர்களும், 907 தன்னார்வலர்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.