/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் உதயநிதி பிறந்தநாள் விழா 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

ADDED : நவ 30, 2024 01:18 AM
திருச்செங்கோடு, நவ. 30--
தமிழக துணை முதல்வர் உதயநிதியின், 48வது பிறந்த நாளையொட்டி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த, 2 குழந்தைகளுக்கு, தி.மு.க., சார்பில் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர தி.மு.க., செயலாளார் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பேபிஷாலினி, அஜித்குமார் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை, பள்ளிப்பாளையம் ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரேமலதா, கார்த்தி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை என, 2 பெண் குழந்தைகளுக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பன், பழங்கள் வழங்கப்பட்டன.
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளார் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மல்லசமுத்திரம் பேரூர் கழக செயலாளர் திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.