/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் பிரச்னை இருதரப்பினரிடையே பேச்சு
/
மாரியம்மன் கோவில் பிரச்னை இருதரப்பினரிடையே பேச்சு
ADDED : ஜூன் 17, 2025 02:27 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, பருத்திப்பள்ளி கிராமத்தில், 120 ஆண்டு பழமையான எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த, 135 குடும்பத்தினர் பூஜை செய்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கும், தனிப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த, பத்து ஆண்டுகளாக
இக்கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து விழாக்குழு அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதுகுறித்து விசாரித்த எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா, 'ஹிந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதல்படி உத்தரவு வரும் வரை இருதரப்பினரும் எந்த வாக்குவாதமும் செய்யக்கூடாது' என, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.