/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
/
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : டிச 21, 2024 01:13 AM
எலச்சிபாளையம், டிச. 21-
-ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு கடந்த அக்.,19ம் தேதி நடந்தது. மாநில அளவில் இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் எலச்சிப்பாளையம் அருகேயுள்ள, சக்கராம்பாளையம் ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ௧ மாணவ, மாணவியர், 17 பேர் அரசு வழங்கும் ஊக்கத்தொகையான, 36 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவன் சென்னகேசவன், மாணவி தக் ஷயா ஆகியோர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
மேலும், சுதீக் ஷா மற்றும் கவிலேஷ் ஆகியோர், 100க்கு 99 மதிப்பெண்களும், ஹாசினி, 100க்கு 98 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். பிரகல்யா, --97, அனிசா,- 96, சுருபீகா,- 96, நிதிஸ்ரீ, -96, தர்ஷனா, --96, பிரணிஷா, -95, தியாசண்ஷிதா,- 95, நிஷாந்த், -95, வர்ஷிதா, -94, மெளமிதா, 94,
அனந்தஸ்ரீ, 94, விஷாந்த், -94 என மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தகுதி பெற வைத்துள்ளது ஸ்ரீ வித்யபாரதி பள்ளி.
பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவர்களை பள்ளி தலைவர் சுப்ரமணியம், பள்ளி தாளாளர் சுதா ராஜேந்திரன் மற்றும் பள்ளி இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.