/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகத்திற்கும் கருத்து கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: தங்கமணி
/
தமிழகத்திற்கும் கருத்து கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: தங்கமணி
தமிழகத்திற்கும் கருத்து கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: தங்கமணி
தமிழகத்திற்கும் கருத்து கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: தங்கமணி
ADDED : ஏப் 18, 2024 01:18 AM
நாமக்கல், ''தமிழகத்திற்கும், கருத்து கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
தங்கமணி கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடும் வெயிலில் கூட, பெண்கள் எத்தனை பேர் இங்கு கூடி இருந்தனர் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மூன்றாண்டு கால, தி.மு.க, அரசில், மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
சில கருத்து திணிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக எங்கள் வேட்பாளர் தமிழ்மணி, லட்சக்
கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கருத்துக்கணிப்பை பொறுத்தவரை நாங்கள் நம்புவது கிடையாது. 1998ல் இதுபோன்ற கருத்து கணிப்பில், இரண்டு தொகுதி மட்டும், அ.தி.மு.க, வெற்றி பெறும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது தெரிவித்தனர். ஆனால், 30 லோக்சபா தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதனால், தமிழகத்திற்கும், கருத்து கணிப்பிற்கும் எந்த
சம்பந்தம் கிடையாது. இதேபோன்று, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை, வரும், ஜூன், 4ல் பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

