/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு:தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
/
தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு:தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு:தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு:தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
ADDED : செப் 22, 2025 01:54 AM
நாமக்கல்:கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., பேசுகையில், ''தமிழகத்தில் அதிகபடியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது,'' என்றார். அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிபெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என்றார்.
ராஜேஸ்குமார் எம்.பி., பேசுகையில், ''ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், தி.மு.க., ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்,'' என்றார்.
மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றனர்.